new BB1

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சோளம்!

Loading...

7d61452e-5be6-4521-8952-5c2c4505a070_S_secvpfஇந்தியாவில் சோளம், அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளம் நவதானிய வகைகளுள் ஒன்று. சமீப காலமாக சிறு தானியவகைகளான கம்பு, ராகி, சோளம் போன்றவற்றை பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. சிறு தானியங்களில் பல இருந்தாலும் சோளம் முதன்மையான உணவுப் பொருளாக கருதப்படுகிறது.

சோளம் ஒரு அருமையான உணவுப் பொருள், பார்லி அரிசிக்கு நிகரான சத்துக்கள் இதில் உள்ளன. கோதுமையில் உள்ள புரதச் சத்துக்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால் உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின் இதில் அதிகமாக உள்ளது.

அனைத்து வயதினரும் உண்பதற்கு ஏற்ற சோளம், சுலபமாகவும் செரிக்கக் கூடியதுமாகும். சோளத்தில் அதிக அளவு மாவுச்சத்தும், நார்ச்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. சோளத்திலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் உடலுக்கு நல்ல பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகும்.

சோளத்தினுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் அதனுள் இருக்கும் ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸூடன் தொடர்பு உடையது. சோளத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. ஆராய்ச்சிகள் மூலம சோளத்தில் உள்ள நார்ச்சத்து ஆக உடலில் மாற்றப்படுகிறது. என்று கண்டறியப்பட்டுள்ளது. இவை பாக்டீரியாக்களை வளரச் செய்கிறது.

இது போல் குடலுக்கு சத்தை கொடுத்து குடல் புற்றுநோயை தடுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது சோளமாகும். சோளத்தில் உள்ள சத்துக்கள் உடல் செரிமான சக்தியை அதிகளவு இல்லாமலும் குறைந்த அளவு இல்லாமலும் பார்த்துக் கொள்கிறது. இதனால் இரத்தத்தில் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவு சம நிலையில் உள்ளதால் கண்டறியப்பட்டுள்ளது.

இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும். கர்ப்பிணிகளுக்கு தேவையான ஃபோலிக் அமிலத்தை மக்காசோளம் கொடுக்கிறது. மக்காசோளத்தில் உள்ள ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு இல்லாமல் போனால் குழந்தையின் எடை குறையும் மற்றும் மூளை வளர்ச்சியும் குறையும். நல்ல கண் பார்வை மற்றும் தோலுக்கு மக்காசோளம் சிறந்தது.

மக்காசோளம் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை குறைக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது

Loading...

728

2