new BB1

சுவையான லாம்ப் கறி ரெடி!

Loading...

A1718_08
தேவையானபொருட்கள்
வறுத்து அரைக்க:
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 5 பல்
இஞ்சி – ஒரு அங்குல துண்டு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 3 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 15
மிளகு – அரை தேக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 5
ஷாஹி ஜீரா – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கரி செய்ய:
ஆட்டுக்கறி – ஒரு கிலோ
நெய் – கால் கப்
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை
முதலில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எடுத்து வைக்கவும்.

எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.

பிறகு மிளகாய், மிளகு, பட்டை, கிராம்பு, ஷாஹி ஜீரா சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும்.

ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். தேங்காயை லேசாக வறுத்தெடுக்கவும். பிறகு ஆற வைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்து வைக்கவும். அரைத்ததை (தேங்காய் கலவையை தவிர ) ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஆட்டுக்கறியையும் சேர்த்து நன்கு கிளறி குறைந்த பட்சம் நான்கு மணி நேரமாவது ஊற விடவும்.

ஊறிய பின் நெய்யை சூடாக்கி இந்த கலவையை சேர்த்து வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் மூடி வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.

ஊறியப்படியால் குக்கரில் வைக்க வேண்டாம். அப்படியே பஞ்சு போல் வெந்து விடும். வெந்ததும் தேங்காய் விழுது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஐந்து நிமிடம் விட்டு இறக்கவும்.

சூடான சுவையான கோலாபூரி லாம்ப் கறி ரெடி.

Loading...

728

2