new BB1

ஜூன் 16 முதல் தாஜ்மஹாலில் இலவச WIFI சேவை

Loading...

techmalar-tajmahal

வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதியில் இருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்-க்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களும் 30 நிமிடங்கள் வரை இலவச Wifi வசதியை பயன்படுத்தலாம்.

இந்த 30 நிமிடத்திற்குள் டவுன்லோட் மற்றும் பிரவுசிங் செய்து கொள்ளலாம் அதற்கு மேல் பயன்படுத்த விரும்புகிறவர்களுக்கு மணிக்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படும் என BSNL நிறுவனம் கூறியுள்ளது.

BSNL நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (UP-West) பிரதீப் குமார் கூறுகையில் தாஜ்மஹாலில் Wifi சோதனை முடிவு பெற்று, வரும் ஜூன் 16 ஆம் தேதி மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் தொடங்கப்படவுள்ளது என கூறினார்.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பு நிர்வாகத்தை பெங்களூரை அடிப்படையாக கொண்ட Quadgen என்ற நிறுவனமும், மேலும் இந்த சேவைக்கான அலைவரிசையை BSNL நிறுவனமும் வழங்குகிறது.

மேலும் பாதுகாப்பு காரணத்திற்காக இந்த சேவை தாஜ்மஹாலின் முதன்மை வாயிலில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

தனது மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய இந்த தாஜ்மஹாலிற்கு சுமார் 10 லட்சம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பாக வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

நாட்டின் பொது இடங்களில் Wifi வசதியை வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே ஆக்ராவின் Cantonment ரயில் நிலையத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்போது தாஜ்மஹாலிலும் வெற்றிகரமாக தொடங்கப்படவுள்ளது. இதே போல் Fatehpur Sikri-ல் இந்த வசதியை விரிவுபடுத்தப்படும் என இந்த திட்டத்தில் பணிபுரியும் BSNL நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது

Loading...

728

2