new BB1

டாடா ஹெக்ஸா தீபாவளி ரிலீஸ்!

Loading...

15177

எஸ்யூவி/எம்யூவி மார்க்கெட்டில் தனது புதிய கிராஸ்ஓவர் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா. ஹெக்ஸா என்கிற பெயரில் இந்தக் காரை மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைத்திருந்தது டாடா. ஆரியா தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் உருவாக இருக்கும் இந்தக் கார் தீபாவளி நெருக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. உயரமான முன்பக்க பானெட், தேன்கூடு வடிவ கிரில், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி டெயில் லைட்ஸ் என மாடர்னாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது ஹெக்ஸா.


மூன்று வரிசைகள் கொண்ட இந்தக் காரில் ஆறு பேர் உட்காரமுடியும். மூன்று வரிசைகளுக்குமே ஏஸி வென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பிற்காக இந்த காரில் 6 காற்றுப்பைகளை பொருத்த இருக்கிறது டாடா. இன்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றங்களும் இல்லை. 2.2லிட்டர், 154bhp இன்ஜினையே கொண்டிருக்கிறது ஹெக்ஸா. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனுமே உண்டு. இதன் விலை 12 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும். விற்பனைக்கு வரும்போது இதன் பெயரில் மாற்றம் இருக்கலாம்.

Loading...

728

2