new BB1

‘பசியா மருந்து’ சாப்பிட்டவர்களா இவர்கள்!

Loading...

ht3394‘‘17 முதல் 22 வயதுகளில் இருக்கும் வளர் இளம் பருவத்தினர் மற்றும் 60 வயது தாண்டிய முதியவர்களிடமும்தான் இந்த பசியின்மை அதிகம் காணப்படுகிறது. துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, தாதுக்கள் போன்ற சத்துப்பற்றாக் குறையால் பசியின்மை ஏற்படும். மருத்துவரீதியாக சாதாரண காய்ச்சல் முதல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அடையாளமாகவும், நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும் பசியின்மை உண்டாகும். மன அழுத்தம், மனப்பதற்றம் போன்ற மனநல குறைபாடுகளாலும் பசியின்மை உண்டாகலாம்.

சாப்பிட்டால் எடை கூடிவிடும் என்று கவலை கொள்கிற அனோரெக்ஸியா (Anorexia) பிரச்னையும் பசியின்மையின் அடையாளம்தான். இதை கவுன்சலிங்கின் மூலமே சரி செய்துவிடலாம். சாப்பிடாமலேயே இருப்பது, நேரத்துக்கு சாப்பிடாதது, அளவு குறைவாகவோ, வேண்டா வெறுப்பாகவோ சாப்பிடுவது போன்ற நடவடிக்கைகள் தெரிந்தால் அது பசியின்மைதான் என்பதை புரிந்துகொண்டு, உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதன்பிறகு மருத்துவரீதியாக பரிசோதனைகள் செய்துகொண்டு, பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்…’’

Loading...

728

2