new BB1

இடியாப்பம் இனிப்பு அடை

Loading...

இடியாப்பம் இனிப்பு அடைஇடியாப்பம் – 3
முட்டை – ஒன்று
சீனி – 5 தேக்கரண்டி
ஏலப்பொடி – சிறிது
ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
நெய் – சுட்டு எடுக்க

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தை போட்டு அதனுடன் நெய்யை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு சீனி கரையும்படி கலந்து விடவும்.

ஒரு பேனில் அல்லது தோசைகல்லில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் இடியாப்ப கலவையில் ஒரு கரண்டி எடுத்து அடையாக ஊற்றவும்.

தீயின் அளவை மிதமாக வைத்து நன்கு சிவக்க விடவும். சிவந்த பின், தோசை திருப்பியால் மெதுவாக திருப்பி விடவும். (கவனமாக திருப்ப வேண்டும் இல்லையென்றால் பிய்ந்து விடும்). மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி நன்கு சிவக்க விடவும்.

இரு பக்கமும் நன்கு சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். சுவையான இடியாப்ப இனிப்பு அடை ரெடி.

Loading...

728

2