new BB1

இன்றைய ராசி பலன் 2015.08.27

Loading...

raasipalan1111

மேஷம்
தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல்கள் வந்து சேரும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். பிள்ளைகள் வழியில் பெருமைகள் வந்து சேரும்.

ரிஷபம்
நன்மைகள் நண்பகலுக்கு மேல் வந்து சேரும் நாள். அவசர முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். எதையும் நம்பி யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.

மிதுனம்
கனவுகள் நனவாக கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தொழிலில் கடுமையாக உழைப்பதன் மூலம் தான் லாபத்தை எதிர்பார்க்க இயலும்.

கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மருத்துவச் செலவு குறையும்.

சிம்மம்
வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவுவர். உதிரி வருமானம் உண்டு. கட்டிடப் பணியை தொடரும் எண்ணம் மேலோங்கும்.

கன்னி
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டங்களைச்செயல்படுத்த முற்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. உடல் நலம் சீராகும். இடம், பூமியால் லாபம் கிட்டும்.

துலாம்
உடன்பிறப்புகளின் வழியே உதவிகள் கிடைக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

விருச்சகம்
பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பணப்பற்றாக்குறை ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. தொழிலில் நல்ல திருப்பம் ஏற்படும்.

மகரம்
வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

கும்பம்
பணம் பல வழிகளிலும் வந்து சேரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். புதிய பங்குதாரர்களால் லாபம் உண்டு. பயணம் பலன் தரும். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.

மீனம்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். நிதி நிலை உயரும். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர்.

 


Loading...

728

2