new BB1

இரட்டடிப்பான வாட்ஸ் ஆப் பயனர்கள்

Loading...

இரட்டடிப்பான வாட்ஸ் ஆப் பயனர்கள்வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது அதற்கு 430 மில்லியன் பயனர்கள் இருப்பதாகவும் நாள்தோறும் சராசரியாக 50 பில்லியன் தகவல்கள் பறிமாறப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போன்களின் வருகையால் நாள்தோறும் புதிய மொபைல் சேவைகள் பெருகிக்கொண்டே வருகின்றன. அதில், முக்கியமான சேவை, வாட்ஸ்ஆப். மொபைல்களில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதைப் போன்று தற்போது வாட்ஸ்ஆப் சேவையும் பெருகி வருகிறது. இணைய இணைப்பின் மூலம் அளிக்கப்படும் இந்த சேவையின் மூலம், குறுந்தகவல்கள் மட்டுமல்லாது, படங்கள், வீடியோக்கள், ஒலிகள் ஆகியவற்றையும் அனுப்ப முடியும்.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் 200 மில்லியனாக இருந்த வாட்ஸ்ஆப் பயனர்கள், புத்தாண்டு தொடக்கத்தில் 400 மில்லியனாக உயர்ந்தார்கள். இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை 30 மில்லியன் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

எஸ்.எம்.எஸ். சேவைக்குப் போட்டியாக வந்துள்ள வாட்ஸ்ஆப் சேவை, முதல் ஆண்டில் இலவசமாகவும், அடுத்த ஆண்டில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது. மற்றபடி இந்த சேவையின் மூலம் எந்த ஒரு விளம்பரமோ அல்லது ஸ்டிக்கர் விற்பனைகளோ இடம்பெறுவதில்லை. “முதல் ஆண்டில் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்துபவர்கள், அதன் தேவையை உணர்ந்து கொண்டு அடுத்த ஆண்டில் இருந்து பணம் செலுத்தும் சந்தாதாரர்களாக மாறி விடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜன் கியோம்

Loading...

728

2