new BB1

உடலுக்கு நன்மை பயக்கும் நாவல்பழம்

Loading...

உடலுக்கு நன்மை பயக்கும் நாவல்பழம்1. நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கஷாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத் தொல்லை நீக்கும்.

2. மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.

3. இந்தப் பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். ரத்தத்தை சுத்தம் செய்யும். ரத்த விருத்தி ஆகும். சிறுநீர்க் கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும்.

4. பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்பு உண்டு. நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.

பழுக்காத நாவல் காய்களை நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

6. நாவல் கொழுந்துச் சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும்.

நாவல் மரப்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, குருதி பேதி, கீச் கீச் என்ற ஈளை இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. நாக்கு, வாய் கொப்பளித்தால் குணம் காணலாம்

நாவல் மரப்பட்டையை இடித்து சலித்து தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்

9. குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தக்கழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுப்பாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். இந்த மரப்பட்டையின் கஷாயத்தை கொண்டு புண்களை கழுவலாம்.

10. மரத்தின் வேரை ஊறவைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு பலத்தையும் தரும்.

Loading...

728

2