new BB1

உடல் ஆரோக்கியத்திற்கான சில குறிப்புகள்

Loading...

உடல் ஆரோக்கியத்திற்கான சில குறிப்புகள்சோர்வு நீங்க

நீங்க களைச்சுப் போய் சோர்வா இருக்கிறப்ப, தோள் பட்டைகளை அப்படியே ரிலாக்ஸ்டா, லூசா இறக்கி விடுங்க. டென்ஷனை விடுங்க.சோர்வு நீங்கி புது்துணர்வு கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

காரசாரமான உணவைத் தவிர்கவும். தினமும் வாக்கிங் செல்லுங்கள். தியானம் பண்ணுங்க. உடற்பயிற்சி செய்யுங்க. டாக்டர் அனுமதி இல்லாம எந்த மருந்தையும் சாப்பிட கூடாது.. ஆனா நீங்க எடுத்துக்க வேண்டிய மருந்து மாத்திரையைக் கட்டாயம் சாப்பிடுங்க.

ஹைப்பர் டென்ஷன் நீங்க

ஹைப்பர் டென்ஷன் அதான் அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஹை B.P பதினைந்து நாளுக்கு ஒரு தடவை செக் பண்ணிக்குங்க. டாக்டர் சொல்றபடி மருந்து சாப்பிடுங்க. டயட்டில இருக்க வேண்டும் உடல் எடையைக் குறைக்க வேண்டும். தினமும் யோகா பண்ணுங்க

பற்கள் ஆரோக்கியமாக இருக்க

உங்க டூத் பிரஷை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மாத்துங்க. அப்பத் தான் ஈறும், பல்லும், சுத்தமா இருக்கும்.சூடான அல்லது கூலான எதையும் சாப்பிடும் போது வலியிருந்தா, உங்க பற்கள் சென்சிடிவா இருக்குன்னு அர்த்தம். பல் ஒவ்வொண்ணா போய்விடும்.முதல்ல ஈறுகளை பலப்படுத்தும் சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள்.

பற்கள் பளீ ர்னு சுத்தமா இருக்கணும்னா ரெண்டுல இருந்து நாலு நிமிஷம் வரை பல் தேயுங்க. பல்லைத் தேய்க்கும் போது, பிரஷை பேனா பிடிக்கிற மாதிரி பிடிச்சுக்கிட்டு தேயுங்க. ஈறுகளுக்கு இது தான் நல்லதுன்னு நிபணர்கள் சொல்லியிருக்காங்க.

கண்களை பாதுக்காக

பார்வை கோளாறு இருக்கான்னு தெரிய, ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை செக் பண்ணிக்குங்க. லென்ஸ் போடற வராயிருந்தா, தினமும் இரவு, சோம்பல் படாம அதை சுத்தம் செய்யுங்க.

உடல் எடை தெரிய

சென்டிமீட்டர்ல உங்க உயரத்தைக் குறிச்சிக்குங்க. அதுல 100 குறைச்சிடுங்க. அதாவது உங்க உயரம் 165 செ.மீ னு வச்சுக்கிட்டா, அதுல 100 ஐக் கழிச்சுடுங்க. மீதி எவ்வளவு மீதி 65 உங்க எடையாக இருக்கணும்.

Loading...

728

2