ஓட்ஸ் – அரை கப்
பட்டாணி – கால் கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2 (காரத்திற்கேற்ப)
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி இலை – சிறிது
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த பட்டாணியை மிக்ஸியில் போட்டு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் வெங்காயம் போட்டு சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விடவும்.
அதன் பிறகு தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதனுடன் ஓட்ஸை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
கடைசியாக கேரட் துருவலை சேர்த்து வதக்கவும்.
இந்த வதக்கிய கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கலவை கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் பட்டாணியை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசனை அடங்கியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.
சுவையான வித்தியாசமான ஓட்ஸ் பீஸ் குருமா ரெடி.