new BB1

காராகருணை எண்ணெய் பத்தே

Loading...

காராகருணை எண்ணெய் பத்தேகாராகருணை – கால் கிலோ
அரிசி மாவு – கால் கப்
தனி மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கல் உப்பு – 2 தேக்கரண்டி+கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு

காராகருணையை ஒரு இஞ்சு ஸ்லைஸாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காராகருணையுடன் கல் உப்பு போட்டு குலுக்கி 10 நிமிடம் வைக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் காராகருணையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும்.

ஒரு தட்டில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, உப்பு, எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். பிறகு 3 மேசைக்கரண்டி அல்லது 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக பிசைந்துக் கொள்ளவும். அதில் வேக வைத்த காராகருணையை போட்டு எல்லாவற்றிலும் படும்படி பிரட்டி விடவும்.

தோசைக்கல்லில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மசாலா தடவி வைத்திருக்கும் காயை போட்டு வறுக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மற்றொரு புறமும் வெந்ததும் 2 நிமிடம் கழித்து எடுக்கவும்.

மொறுமொறு காராகருணை எண்ணெய் பத்தே ரெடி.

Loading...

728

2