new BB1

கிட்ஸ் ப்ரெட் சாண்ட்விச்

Loading...

கிட்ஸ் ப்ரெட் சாண்ட்விச்ப்ரவுன் ப்ரெட் – 3
கேரட் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று
தக்காளி துண்டுகள் – ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கின வெங்காயம் – 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கின லெட்யூஸ் – 2 மேசைக்கரண்டி
சாம்பார்த்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வதக்குவதற்கு
வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு கேரட் துருவலை போட்டு வதக்கவும்.

பின் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் சாம்பார்த்தூள், உப்பு போட்டு கிளறவும்.

கடைசியாக லெட்யூஸ் இலைகளை போட்டு கிளறி இறக்கி விடவும்.

ப்ரவுன் ப்ரெட் துண்டுகளை எடுத்து, ஓரங்களை நீக்கிவிட்டு முக்கோண வடிவில் குறுக்காக நறுக்கி ஒவ்வொரு துண்டுகளிலும் வெண்ணெயை தடவவும்.

வதக்கிய கலவையை ஒரு மேசைக்கரண்டி அளவிற்கு இரு துண்டுகளின் நடுவில் வைத்து ஒட்டவும்.

இதேப்போல் ஸ்டப் செய்த துண்டுகளை முற்சூடு செய்த சாண்ட்விச் டோஸ்டரில் வைத்து மூடி டோஸ்ட் ஆன பின் வெளியே எடுக்கவும்.

சுவையான கிட்ஸ் ப்ரெட் சாண்ட்விச் ரெடி.

Loading...

728

2