new BB1

கொட்டை இல்லாத பழங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்

Loading...

கொட்டை இல்லாத பழங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்உண்பதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, கொட்டை இல்லாத பழ வகைகளை வாங்குகிறோம். இதுபோன்ற ரகங்களுக்கு, அதிக அளவு பூச்சிக்கொல்லிகளும் வேதி உரங்களும் கொட்டப்படுகின்றன. எனவே, கொட்டை இல்லாத பழங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். கொட்டை உள்ள பழங்களில், கொட்டையை நீக்கிவிட்டு உண்ண வேண்டும். கொட்டைகளின் மேல் ஓட்டுக்கும் உள்ளே இருக்கும் பருப்புக்கும் இடையில் சிறு சவ்வு இருக்கும். கொட்டையைப் பாதுகாக்கும் இந்தச் சவ்வையும் நீக்கிவிட வேண்டும்.

பழங்களை வாங்கும்போது, இயற்கையான அளவைவிட பெரியதாகவும் பளபளப்புடனும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. பழத்தின் தரம் என்பது, அதன் பளபளப்பில் இல்லை. சொல்லப்போனால் இயற்கையாக விளைந்த தரமான பழங்கள் ஒருபோதும் பளபளப்புடன் இருக்காது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழத்தின் காம்பு பச்சையாகவோ, சற்று காய்ந்து இருந்தாலோ, அந்தப் பழம் பறிக்கப்பட்டு குறைந்த காலமே ஆகியிருப்பதாக யூகித்து அதை வாங்கலாம். பழங்களின் மீது அதிகமான கறுப்புப் புள்ளிகள், வெள்ளை நிறத் தூள் வகைகள், சாயம், பூஞ்சை போன்றவை தென்பட்டால் அதைத் தவிர்க்கலாம். அதைப்போலவே முடிந்தவரை பழங்களை, பழங்களாகவே சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக உடலுக்குச் சென்று சேரும். மாறாக, பழத்தை நறுக்கி அதனுடன் சீனி, பால், ஐஸ், சுவையூட்டிகள், மணமூட்டிகள் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாகக் குடிக்கும்போது, நார்ச்சத்தும் சத்துமிகுந்த கனிமங்களும் வடிகட்டப்பட்டுவிடுகின்றன. அதனால் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டும் தேன் கலந்து ஜூஸ் பருகலாம்.

Loading...

728

2