new BB1

‘தடையில்லா இன்டர்நெட்’ – கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம்

Loading...

'தடையில்லா இன்டர்நெட் கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம்கூகுள் நிறுவனம் புதிய திட்டங்களின் மூலம் மக்களை ஆச்சர்யப்படுத்துவது புதிய விஷயம் இல்லை என்ளாலும் அந்நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மக்களை வியப்படைய செய்கின்றது தான் மறுக்க முடியாத உண்மை.. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம் குறித்த தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
கூகுள் நிறுவனத்தின் ப்ராஜக்ட் ஃபை திட்டமானது அதிவேக இன்டர்நெட் வசதியை அனைவருக்கும் ஏற்ற விலையில் வழங்குவதாகும்.
இந்த திட்டத்தினை செயல்படுத்த கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் ஸ்ப்ரின்ட் மற்றும் டி-மொபைல் என இரு பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ப்ராஜக்ட் ஃபை நெட்வர்க்களின் நெட்வர்க் ஆகும். இதன் மூலம் சிறந்த நெட்வர்க்களுடன் உங்களை இணைப்பில் வைத்திருக்கும்.
ஸ்ப்ரின்ட் நெட்வர்க் பயன்படுத்தும் போது வெரிசான் நெட்வர்க் சிக்னல் வேகமாக இருந்தால் உடனடியாக உங்களது சிக்னல் வெரிசான் நெட்வர்க்கில் இணைந்து கொள்ளும். ஒரு வேலை வெரிசான் நெட்வர்க் வேகம் குறைந்தால் மீண்டும் தானாக வேகமான நெட்வர்க் சிக்னலை மாற்றி கொள்ளும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தடையில்லாமல் எந்நேரமும் வேகமான இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.
வை-பை மூலம் உங்களது கருவியுடன் இணைந்து எந்நேரமும் இன்டர்நெட் பயன்படுத்த ப்ராஜக்ட் ஃபை வழி வகுக்கும். வை-பை பயன்படுத்தும் போது என்க்ரிப்ஷன் மூலம் தகவல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
ப்ராஜக்ட் ஃபை உங்களது மொபைல் நம்பரை க்ளவுடில் வைத்திருக்கும், இதனால் வை-பை மூலம் அழைப்பு, குறுந்தகவல், வாய்ஸ்கால் போன்றவைகளை மேற்கொள்ள முடியும்.
ப்ராஜக்ட் ஃபை திட்டத்தில் ஒரே விலை தான், பயனாளிகள் தாங்கள் பயன்படுத்தியதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். ஆரம்ப கால திட்டமாக மாதம் ஒன்றுக்கு $20 வரை வசூலிக்கப்படும், இதில் அளவில்லா அழைப்பு, குறுந்தகவல், சர்வதேச குறுந்தகவல்களை சுமார் 120 நாடுகளுக்கு மேற்கொள்ள முடியும். விலை பட்டியலை பொருத்த வரை $10க்கு ஒரு ஜிபி, $20க்கு 2ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது.
ஒரு வேலை $20 செலுத்தி 2ஜிபி டேட்டாவில் ஒரு ஜிபி மட்டும் பயன்படுத்தினால் மீதம் இருக்கும் ஒரு ஜிபி அடுத்த மாதத்திற்கு நீட்டிக்கப்படும்.
தற்சமயம் வரை நெக்சஸ் 6 பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை பயன்பாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.

Loading...

728

2