new BB1

தானியங்கி கார்கள்: சுற்றுச்சூழலுக்கு நன்மையா?

Loading...

தானியங்கி கார்கள் சுற்றுச்சூழலுக்கு நன்மையாசுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு மிக முக்கியமான காரணிகள், கார்களும், அதை ஓட்டும் மனிதர்களும் தான். காற்று மாசு படுவதை தடுக்க, காரை ஓட்டவே கூடாது என்று தடுக்க முடியாது. சரி, ஓட்டுனரில்லாத கார்கள் வந்தால்? அப்படி வந்தால், நிச்சயமாக பூமியை வெப்பமேற்றும் வாயுக்களின் அளவு 90 சதவீதம் குறையும் என்கிறது அமெரிக்காவிலுள்ள லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகம். அது வெளியிட்டுள்ள அறிக்கை.
2030 ஆண்டு வாக்கில் ஓட்டுனரில்லாத தானியங்கி வாடகை கார்கள் புழக்கத்திற்கு வந்துவிடும் என்றும் அந்த ஆய்வு கணிக்கிறது.
அப்போது ஓட்டுனரில்லாத காரையும், மனிதர்கள் ஓட்டும் காரையும் ஒப்பிட்டால், தானியங்கி கார் வெளியேற்றும் வெப்பமேற்றும் வாயுக்களின் அளவு, 82 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று அதிரடியாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ‘நேச்சர் கிளைமேட் சேஞ்ச்’ என்ற ஆய்விதழில் இந்த கணிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஓட்டுனரில்லாத வாகனங்கள், 2030 வாக்கில் சாலைகளில் சகஜமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ராண்ட் கார் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, தற்போது தானியங்கி கார்களை தயாரிக்கும் முனைப்பில் இருக்கும் எல்லா கார் நிறுவனங்களுமே, 2017 வாக்கில் பாதி தானியங்கி கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதில், சாலைகளில் வெள்ளோட்டம் பார்த்து வரும், கூகுள் தானியங்கி காரும் அடக்கம்.
தானியங்கி கார்கள், வழக்கமான கார்களின் விலையை விட, 60 லட்சம் ரூபாய் கூடுதலாகவே இருக்கும். என்றாலும் உபேர் போன்ற நவீன வாடகை கார் நிறுவனங்களுக்கு அவை லாபகரமானதாக இருக்கக்கூடும். லாரன்ஸ் பெர்க்லி ஆய்வை மேற்கொண்ட ஜெப்ரி கிரீன்பிளாட் மற்றும் சாம்வேக் சக்சேனா ஆகிய இருவரும், தானியங்கி கார்கள் வந்துவிட்டால், மக்கள் தங்கள் பயணத்திற்கு ஏற்ற அளவில் இருக்கும் கார்களை தேர்ந்தெடுப்பர் என்கின்றனர்.
எத்தனை பேர் பயணிக்கின்றனர், எதுவரை, எந்த பாதையில் போன்றவற்றை கச்சிதமாக தீர்மானித்து பயணிக்க தானியங்கி கார்கள் உதவும். இதன் மூலம் வெப்பமேற்றும் வாயுக்களை வெளியேற்றுவது வெகுவாக குறையும் என்கின்றனர்,

Loading...

728

2