new BB1

பீப் ப்ரை

Loading...

பீப் ப்ரைபீப் – அரைக்கிலோ
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
தயிர் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 – 4 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 2 இணுக்கு

முதலில் மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதனை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய கறியில் மிளகாய்த்தூள், தயிர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்கவும்.

கால் மணி நேரம் கழித்து குக்கரில் கறிக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் வைத்து 5 விசில் வந்ததும் எடுக்கவும்.

வெந்த கறியில் தண்ணீர் இருந்தால் வற்ற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கறியை போட்டு வதக்கவும்.

கறி நன்கு வதங்கியதும் இறக்கி வைத்து விடவும்.

சுவையான பீப் ப்ரை ரெடி.

Loading...

728

2