new BB1

மழைக்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நோய்கள்

மழைக்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நோய்கள்பழிவாங்கும் எண்ணத்தோடு இந்த வருடத்திற்கான மழை மேகங்கள் வரத் தொடங்கி விட்டது. பின்ன என்னங்க அடை மழை பெய்தால் நம் நாட்டின் நிலையை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன? மேடு பள்ளங்களுடன் சாலைகள், குளம் போல் சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீர், முடிவில்லா போக்குவரத்து நெரிசல்கள் போன்றவைகளை எங்கும் காணலாம் தானே? குளிர் காற்று மற்றும் மழையில் இருந்து திடமான குடையும், நல்லதொரு ரெயின்கோட்டும் உங்களை வெதுவெதுப்பாக வைத்திருக்கும்.

ஆனால் நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய மற்றொன்றும் உள்ளது. ஈரத்தன்மை, சேறும் சகதியும், தேங்கி நிற்கும் தண்ணீரும் போதும் பல விதமான வியாதிகள் வந்து சேர.

நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் இந்த வியாதிகள் ஏற்படலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு தான் இந்நேரத்தில் நோய் உண்டாவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

குழந்தைகள் நோய்வாய் படும் போது நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்ல விடாமல் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வியாதிகள் குழந்தைக்கு வந்து விட்டு, அதனை சரிவர கவனிக்காமல் விட்டால், அது குழந்தையின் உயிரையே காவு வாங்கி விடும்.

மலேரியா நம் உலகத்தில் அதிகமாக ஏற்படும் நோய்களில் ஒன்று தான் மலேரியா. ப்ரோடோசோன் பிளாஸ்மோடியம் எஸ்.பி.பி.-யால் (பி.விவாக்ஸ், பி.ஃபால்சிபாரம், பி.மலரியே அல்லது பி.ஓவேல்) தான் மலேரியா உண்டாகிறது. பெண் அனாஃபிலிஸ் கொசுவால் இந்த நோய் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ஆரோக்கியமாக இருப்பவருக்கு கிருமி பரவும்.

அறிகுறிகள் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சீரான இடைவேளையில் காய்ச்சல். நடுக்கத்துடன் சேர்த்து தலைவலிகளும் குமட்டலும். நோயாளிக்கு தசை வலியும் சோர்வும் ஏற்படும்.

காலரா இந்த கொடிய வியாதிக்கு காரணமாக இருப்பது விப்ரியோ காலரே எனப்படும் கிருமியாகும். இது சிறு குடலை பாதிக்கும். நோயரும்பு காலமான 6-48 மணி நேரத்தில், தொற்று ஏற்பட்ட உடனே அறிகுறிகள் வேகமாக காட்ட ஆரம்பித்து விடும்.

பொதுவாக மனித கழிவுகளால் மாசுப்பட்ட உணவு மற்றும் தண்ணீரால் உண்டாகும் காலரா, ஒட்டிப் பரவக் கூடியவை. இந்த நோயை பரப்பும் செயலை ஈக்கள் செய்யும். அதனால் தான் மோசமான சுகாதாரத்தை கொண்ட பகுதிகளில் இந்த நோய் வேகமாக பரவும்.

அறிகுறிகள் கடுமையான வயிற்றுப் போக்கால் அவதிப்படுவார் நோயாளி; மலம் நீராக இருந்தாலும் வலி இருக்காது. குமட்டல் இல்லாமல் வாந்தியும் கூட ஏற்படலாம். முதல் சில மணிநேரங்களுக்கு நீரிழப்பு ஏற்படும். இதனால் உடனடி உடல் எடை குறைதலும் தீவிர தசை வலியும் ஏற்படும்.

டைபாய்டு பாக்டீரியம் சல்மோனெல்லா டைஃபியால் ஏற்படக்கூடியது தான் இந்த நோய். மிகுந்த கொடிய தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோயாகும் இது. இந்த பாக்டீரியா மனிதக் கழிவுகளில் இருக்கும்.

மாசு அடைந்த உணவு மற்றும் தண்ணீரை பருகுவதால், ஆரோக்கியமாக இருக்கும் நபர் கூட இந்த நோயால் பாதிக்கப்படுவார். இந்த நோய் குணமானாலும் கூட சிலருக்கு இந்த தொற்று பித்தப்பையில் நீடிக்கும். மாசுப்படுத்தப்பட்ட தண்ணீர் மற்றும் உணவை ஈக்கள் எடுத்து இந்த நோயை பரப்பும்.

அறிகுறிகள் நீடித்த காய்ச்சல் தான் இந்த நோயின் முதல் அறிகுறி. ஐந்தாவது நாளன்று காய்ச்சல் மிகவும் அதிகரிக்க தொடங்கும். தீவிரமான வயிற்று வலியுடன் கூடிய தலைவலி மற்றும் குழப்பும் கூட பொதுவான ஒன்றே.

ஹெபடைடிஸ் ஏ இந்த நோய் ஏற்படுவது ஹெபடைடிஸ் ஏ கிருமியால். இது வாய் வழி மற்றும் மனிதக் கழிவு மூலமாக பரவவும். நோயாளியிடம் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நோய் பரவியதற்கு பல உதாரணங்கள் உள்ளது. இது தொற்று நோயாய் இருப்பதற்கு ஈக்களும் காரணமாகும்.

அறிகுறிகள் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். தலைவலி மற்றும் மூட்டு வலியுடன் கூடிய அளவுக்கு அதிகமான உடல் வெப்பநிலை, நோயாளிக்கு பசியின்மை உண்டாகும். அதோடு சேர்த்து வாந்தியும் குமட்டலும் கூட ஏற்படும்.

728