new BB1

ரோஸ் குக்கீஸ்

Loading...

ரோஸ் குக்கீஸ்கோதுமை மாவு – ஒரு கப்
மைதா மாவு – ஒரு கப்
சர்க்கரை – 3/4 கப்
முட்டை – ஒன்று
பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
தேங்காய் பால் – ஒரு கப்(கரைக்க தேவையான அளவு)
ரோஸ் குக்கீஸ் மோல்டு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

கோதுமை மாவு மற்றும் மைதா மாவை பேக்கிங் பவுடர், உப்பு கலந்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை பீட்டரில் அடிக்கவும்.

பின்னர் அதில் சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரோஸ் குக்கீஸ் மோல்டை வைத்து சிறிது நேரம் சூடுப்படுத்தவும். பின்னர் சூடாக உள்ள மோல்டை கரைத்து வைத்திருக்கும் மாவில் பாதியளவு முக்கி எடுக்கவும்.

மாவில் தோய்த்து எடுத்த மோல்டை எண்ணெயில் வைக்கவும். ரோஸ் குக்கீஸ் பாதியளவு வெந்ததும் மோல்டை லேசாக குலுக்கினால் மோல்டிலிருந்து கழன்றுவிடும்.

வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். தீயை மிதமாக வைத்தே செய்யவும்.

சுவையான மொறு மொறு ரோஸ் குக்கீஸ் ரெடி.

Loading...

728

2