new BB1

வித்தியாசமான வடிவமைப்பில் LAPCARE YO ப்ளூடூத் ஸ்பீக்கர்

Loading...

வித்தியாசமான வடிவமைப்பில் LAPCARE YO ப்ளூடூத் ஸ்பீக்கர்தற்போது தொழில்நுட்ப சந்தையில் பாவனையிலுள்ள ப்ளூடூத் ஸ்பீக்கர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், வேறுபட்ட பாவனைகளுடனும் Lapcare Yo காணப்படுகின்றது.
Lapcare Yo இலகுவான பாவனையுடையது. இதனுடைய Power button பின்புறமாக மிகச் சிறிதாகவும் காண்பதற்கு சிரமமாகவும் அமைந்துள்ளது. எனினும் ஒருதடவை button ஐ அழுத்தியதும் ப்ளூரூத் இணைப்பு இலகுவாக கிடைக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
அதேவேளை ப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெற்றால் கருவியில் நிலையான ஒளி ஒன்று பெறப்படும் இதன் மூலம் ப்ளூடூத் இணைப்பு பெறப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.
இது தவிர ஒலியின் தரமும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை கருவியை V வடிவில் மாற்றுவதன் மூலம் வேறுபட்ட ஒலியினை அவதானிக்க முடியும்.
அதேவேளை தரமான ஒலி வடிவினை தரக்கூடிய கருவிகளில் Lapcare Yo மிகவும் விலை குறைவானதாக காணப்படுகின்றது. அத்துடன் Lapcare Yo வில் தேவை ஏற்படும் பட்சத்தில் சத்தத்தினை அதிகரிக்க முடியும். இதன் விலை 3979 ரூபா ஆகும்.
எனவே குறைந்த விலையில் ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க நினைப்பவர்களுக்கு Lapcare Yo சிறந்த ஒன்றாக தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

728

2